சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 552 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் நெடுந்தீவின் உறிமுனாய், வெள்ளியல் மற்றும் சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கரையோரங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் ஐந்நூற்று ஐம்பத்து இரண்டு (552) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைது செய்யப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கல்பிட்டி உச்சமுனை கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கரை ஒதுங்கிய 02 சாக்குகளில் இருந்த சுமார் ஐம்பத்தைந்து (55) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான) கைது செய்துள்ளனர்.

மேலும், 2024 ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் வடக்கு கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த ஒரு பார்சலில் (01) பொதி செய்யப்பட்ட சுமார் நாற்பது (40) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை), வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தின் கடற்படையினர் நெடுந்தீவின் உறிமுனாய், வெள்ளியல் கடற்கரைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கரை ஒதுங்கியிருந்த பன்னிரண்டு (12) பார்சலில் பொதி செய்யப்பட்ட சுமார் 436 கிலோ 700 கிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிருவனத்தின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கரையை நோக்கி மிதந்து கொண்டிருந்த ஒரு (01) பார்சலில் பொதி செய்யப்பட்ட சுமார் 21 கிலோ 200 கிராம் பீடி இலைகளுடன் சுமார் 552 கிலோ 900 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.