ஐஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேகநபர்கள் அரிப்பு பகுதியில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2024 செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி அரிப்பு பிரதேசத்தில் நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தொரு (31) கிராம் நானூறு (400) மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று (01) கைது செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2024 செப்டெம்பர் 03 ஆம் திகதி சிலாவத்துறை அரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று அவதானித்துச் சோதனையிடப்பட்டது. அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த முப்பத்தொரு (31) கிராம் நானூறு (400) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று (01) கைது செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மதிப்பிடப்பட்ட வீதி மதிப்பு சுமார் இரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து முந்நூறு ரூபாய் (298,300) என நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும், சந்தேகநபர்கள் இருவர் (02), முப்பத்தொரு கிராம் (31) நானூறு (400) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.