சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 470 கிலோகிராம் உலர் மஞ்சள் கடற்படையினரால் கைது

புத்தளம் சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் இன்று (2024 செப்டம்பர் 10) கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று எழுபது (470) கிலோகிராம் உலர் மஞ்சள் (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டது.

கடல் வழிகள் ஊடாக நடத்தப்படுகின்ற கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி இன்று (2024 செப்டம்பர் 10) புத்தளம் சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட அதிவிரைவு நடவடிக்கை படகுகள் படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கரையோரப் பகுதியில் உள்ள காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினான்கு (14) பைகளில் நானூற்று எழுபது கிலோகிராம் (470) உலர் மஞ்சள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.