MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை பேரழிவு மேலாண்மை குழுக்கள் இன்று (2020 செப்டம்பர் 09) வெற்றிகரமாக கட்டுப்படுத்தின. அதன்படி, பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்காக கப்பலின் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் மூன்று (03) வல்லுநர்கள் பேரழிவிற்குப் பிறகு முதல்முறையாக கப்பலில் ஏறியதுடன் அவர்கள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு குறித்த கப்பலை விட்டு வெளியேறினர். இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் நிபுணர்களின் குழுவும் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு ஏறி அடுத்த நடவடிக்கைகளுக்கு மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் கப்பலின் தற்போதைய சேதம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களினால் விளக்கப்படும்.