வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையாகத்தின் கடற்படை வீரர்களினால் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 4,150 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட 16 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.