கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ இப்போது கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள கப்பலின் பின் பகுதிக்கு பரவியுள்ளதுடன் கப்பலில் இருந்து கடலில் விழும் கொள்கலன்களும் பல்வேறு பொருட்களும் கடல் அலைகளின் தன்மைக்கு ஏற்ப கரைக்குச் செல்வதைக் காணலாம்.