திருகோணமலை, பவுல்முனைக்கு அப்பாற்பட்ட கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 டிசம்பர் 05) அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருபது (20) பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.