நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்

கடற்படை மற்றும் முல்லைத்தீவு கடற்தொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து 2023 மார்ச் மாதம் 22 ஆம் திகதி புல்முடே, துடுவ பிரதேசத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 Mar 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த பீடி இலைகள் ஒருதொகை வென்னப்புவ கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 22, 2023) அதிகாலை வென்னப்புவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துகொண்டிருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரமுயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 379 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) கைது செய்துள்ளனர்.

22 Mar 2023