புல்முடே கொக்கிளாய் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 2023 ஜூலை 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) பேர், ஒரு டிங்கி படகு (01), சுமார் நூற்று ஐந்து (105) கிலோகிராம் எடையுள்ள மீன் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.