நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, நிலாவேளி மற்றும் லங்காபடுன கடற்பகுதியில் 2023 ஓகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்து (10) பேர், மூன்று (03) டிங்கி படகுகள் , சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் கடல் அட்டைகள் நூற்று பதினாறுடன் (116) சுழியோடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

05 Aug 2023