நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 2447 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் 2023 ஆகஸ்ட் 22 மற்றும் இன்று (23 ஆகஸ்ட் 2023) புத்தளம், பாலவிய, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்ட சுமார் 2447 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த நடவடிக்கைகளின் போது, இந்த சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய 01 சந்தேக நபர் மற்றும் 01 லொறியும் கைது செய்யப்பட்டன.

23 Aug 2023