இலங்கை கடற்படையினரால் 2023 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீர்கொழும்பு, பிடிபன தடாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தடாகம் பகுதியினூடாக சட்டவிரோதமான முரையில் கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று நாற்பது (440) கிலோகிராம் பீடி இலைகளுடன் டிங்கி (01) படகொன்று கைப்பற்றப்பட்டது.