நடவடிக்கை செய்தி
28 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்த 02 சந்தேகநபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் நாகர்கோவில் ஆம்பன் கடற்படை பகுதியில் இன்று (2024 ஜூன் 05,) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது எழுபது (70) கிலோகிராம்களுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை (ஈரமான எடை) எடுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களுடன் (02) ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
05 Jun 2024
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனப் பொருட்கள் ஒரு தொகுதி கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர், இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் 2024 ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு கல்பிட்டி, எத்தாலே எரம்புகொடெல்ல கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள. தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனப் பொருட்கள் தொகுதியொன்று கைப்பற்றியுள்ளனர்.
05 Jun 2024


