நடவடிக்கை செய்தி

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கைக்கு தெற்கே சுமார் 400 கடல் மைல் (740 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி கப்பலொன்று கைது செய்யப்பட்டு இன்று (2024 ஜூன் 14,) மாலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. . பல நாள் மீன்பிடிக் கப்பலில் 150 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது, தற்போது கடற்படையினர் கப்பலின் உட்புறத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

14 Jun 2024