நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
புத்தளம் தளுவ பகுதியில் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
16 Jun 2024
இலங்கை பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் இரகசிய அறைகளில் மறைக்கப்பட்டுள்ள 3250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 131 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
இலங்கை கடலோரக் காவல்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர், தெவுந்தர இருந்து தெற்கு திசைக்கு சுமார் 356 கடல் மைல் (சுமார் 700 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாஹு கப்பல் மூலம் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் காலி துறைமுகத்தில் மேற்படி மீன்பிடி கப்பலை சோதனை செய்த போது குறித்த கப்பலின் கவனமாக தயாரிக்கப்பட்ட பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3250 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் 131 கிலோ 754 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலி துறைமுகத்தில் குறித்த போதைப்பொருளை பார்வையிட்டார்.
16 Jun 2024


