நடவடிக்கை செய்தி

05 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 03 சந்தேகநபர்கள் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

வத்தளை பகுதியில் இன்று (ஜூன் 24, 2024) இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து நடத்திய விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில், விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட சுமார் இருநூறு (200) கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள், (02) ஒரு பெண் சந்தேகநபர் (01) மற்றும் முச்சக்கரவண்டி (01) ஒரு தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 Jun 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 46 கிலோ பீடி இலைகள் மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் இன்று (2024 ஜூன் 24,) மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குல் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாற்பத்தாறு (46) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

24 Jun 2024