இலங்கை கடற்படையினர், இன்று (ஜூன் 25, 2024) அதிகாலை யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையின் போது இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு எதிராக இந்திய மீன்பிடிப் படகை ஆபத்தான மற்றும் கலகத்தனமான முறையில் கையாண்டதன் காரணமாக,கடற்படையின் சிறப்பு படகுகள் படையணியின் மாலுமி ஒருவர் கடுமையாக காயமடைந்து யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.