சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2888 கிலோகிராம் பீடி இலைகளுடன் 03 சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படையினர் மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து மன்னார் வங்காலை பகுதியில் இன்று (2024 ஜூலை 08,) மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பத்தி எட்டு (2888) கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள், ஒரு கெப் வண்டி மற்றும் லொறி வண்டியொன்று கைது செய்தனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான புஸ்ஸதேவ மற்றும் தம்மன்னா ஆகிய நிருவனங்களில் கடற்படையினர் இன்று (2024 ஜூலை 08,) மன்னார் வங்காலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று மற்றும் லொறி வண்டியொன்று அவதானித்து சோதனை செய்தனர். அங்கு, குறித்த கெப் வண்டியில் மற்றும் லொறியில் கொண்டு செல்லப்பட்ட எண்பது (80) பார்சல்களில் அடைக்கப்பட்ட இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பத்து எட்டு (2888) கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் (03), பீடி இலைகள், கெப் வன்டி (01) மற்றும் லொறி வன்டி (01) ஆகியவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.









