நடவடிக்கை செய்தி
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி
 
           இலங்கைக்கு தெற்கு பகுதியில் காலியில் இருந்து சுமார் 200 கடல் மைல் (சுமார் 370 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் சுகவீனமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் இருந்த மீனவரொருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு மூலம் இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவின் கடற்படையினரால் மீட்கப்பட்டார். இன்று (2024 ஜூலை 24,) மாலையில், கடற்படையினர் அவரை கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
24 Jul 2024
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படையினரின் உதவி
 
           இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் சுகவீனமடைந்த, இலங்கையில் பல நாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வணிகக் கப்பலொன்று மூலம் மீட்கப்பட்டார். 2024 ஜூலை மாதம் 24 ஆம் திகதி கரைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அவர் மருத்துவ கவனிப்புக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
24 Jul 2024


