நடவடிக்கை செய்தி
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கைது
இலங்கை கடற்படையினர் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இன்று (2024 ஆகஸ்ட் 03) யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
03 Aug 2024
70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் இன்று (2024 ஆகஸ்ட் 03,) பகல் கிளிநொச்சி இரமதீவ் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எழுபத்தாறு (176) கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) பொதிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களுடன் டிங்கி படகொன்று (01) கைது செய்யப்பட்டது.
03 Aug 2024
வடக்கு கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதால் மூழ்கிய இந்திய மீன்பிடி படகில் இருந்து 2024 ஜூலை 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு (02) மீனவர்கள் மற்றும் சிகிச்சைக்காக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த ஒரு (01) மீனவரின் உடல் இலங்கை கடலோரக் காவல்படையினரால் இந்திய கடற்படைக் கப்பலான 'INS BITRA' க்கு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.
03 Aug 2024


