நடவடிக்கை செய்தி

களுத்துறை பரகொட பிரதேசத்தில் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்

சீரற்ற காலநிலையால் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பரகொட பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். அதன் படி இன்று (2024 ஆகஸ்ட் 19,) மாலை பரகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டார்.

19 Aug 2024