இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி புத்தளம் கரம்ப வீதித்தடை ஏற்பாட்டிற்கு அருகில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எழுபத்தியொரு (371) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுடன் (01) சந்தேக நபர் ஒருவரை (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.