பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் இன்று (13 அக்டோபர் 2024) வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றன.