நடவடிக்கை செய்தி

காலி, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை கடற்படையினரால் அகற்றப்பட்டது

காலி, பத்தேகம பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அகலிய பாலம் மற்றும் தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 அக்டோபர் 14 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

16 Oct 2024

திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார்செய்யப்பட்ட நான்கு (04) கிராம் முந்நூற்று நாற்பது (340) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், பத்து போதை காப்ஸ்யூல்கள் (10) மற்றும் இருபது போதை மாத்திரைகளுடன் (20) இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

16 Oct 2024