இலங்கை கடற்படையினர், மன்னார் வான்காலை பிரதேசத்தில் இன்று (2024 நவம்பர் 09) காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையின் போது, பிடிக்கப்பட்ட சுமார் ஐந்நூற்று எண்பத்தைந்து (585) கடலட்டைகளுடன், சந்தேகநபர்கள் மூன்று (03) பேர் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.