நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்படையின் உதவியுடன் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3380 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பல நாள் மீன்பிடி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றத்தின் விளைவாக, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பெருமளவு ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine), இலங்கை மீன்பிடி படகு (01)மற்றும் சந்தேக நபர்கள் இன்று (02 டிசம்பர் 2024) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கஜபாகு கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் குறித்த போதைப்பொருள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் எம்.ஆனந்த் அவர்களும் கலந்துகொண்டார்.

02 Dec 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 733 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி, மொஹொத்துவாரம கடற்கரைப் பகுதியில் 2024 டிசம்பர் 01 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எழுநூற்று முப்பத்து மூன்று (733) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

02 Dec 2024