ஆனமடுவ, உப்பலவத்தை மஹா ஏரியின் வான்கதவை திருத்துவதற்கு கடற்படை சுழியோடி குழுவின் உதவி
புத்தளம் ஆனமடுவ, உப்பலவத்தை மஹா ஏரியின் வான்கதவு செயலிழந்து இருந்ததை சீர்செய்து மீட்டெடுக்க 2025 ஜனவரி 07 அன்று, கடற்படையின் சுழியோடி குழுவின் உதவியை வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.
ஆனமடுவ, உப்பலவத்தை மஹா ஏரியின் வான்கதவு திறக்கப் பயன்படுத்தப்படும் நெம்புகோல் பழுதடைந்தமையினால் மதகு செயலிழந்துள்ளது தொடர்பாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு, இதனை பழுதுப்பார்பதற்காக ஆராய்ந்து சரி செய்ய கடற்படையின் சுழியோடி குழுவின் உதவி தேவை என கடற்படைத் தலைமையகத்திடம் கோரிக்கை விடுத்திருந்த்து.
இதன்படி, கடற்படையினர் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்ததுடன், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்படை சுழியோடி குழுவை அதற்காக அனுப்பவைக்கப்பட்டு அங்கு, சுழியோடி குழுவினர், வான்கதவுக்கும் மதகு திறக்க பயன்படுத்தப்படும் நெம்புகோலுக்கும் இடையே உள்ள தொடர்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு, செயலிழந்த வான்கவை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வந்தனர்.