மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2025 ஜனவரி 07 முதல் 09 வரை மன்னார் ஒலுதுடுவாய், மாந்தை, வங்காலை, சிலாவத்துறை மற்றும் புத்தளம் தலுவ ஆகிய கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி எட்டு (28) நபர்களுடன் ஏழு (07) டிங்கி படகுகள் மற்றும் இழுவைப் படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
அதன்படி, 2025 ஜனவரி 07, 08 மற்றும் 09 ஆகிய மூன்று நாட்களில் வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான கஜபா நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார், ஒழுதுடுவாய், மாந்தை, வங்காலை ஆகிய கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கடலட்டைகள் பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் காரணமாக பன்னிரெண்டு (12) சந்தேக நபர்கள், மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் இழுவைப் படகொன்றுடன், (01) அறுநூற்று இருபது (620) கடலட்டைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
மேலும், 2025 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி புத்தளம், தலுவ கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னியும், சிலாவத்துறை கடற்பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான தேரபுத்தவும், இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னி நிறுவனத்தின் மூலம், மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கையை மேற்கொண்ட மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பதினாறு (16) சந்தேக நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார், கல்பிட்டி, தலுவ, மட்டக்களப்பு மற்றும் உயிலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், மன்னார், ஒலுதுடுவாய் மற்றும் மன்னார் மாந்தை, ஆகிய இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடலட்டைகளின் கையிருப்பு மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.