நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த 1289 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கீரமுந்தலம பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி உச்சமுனை, கீரமுந்தலம் கடற்கரை மற்றும் கடற்பகுதியில் 2025 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முட்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று எண்பத்தொன்பது (1289) கிலோகிராம் பீடி இலைகளுடன், (ஈரமான எடை) ஒரு டிங்கி படகு (01), இழுவைப் படகுகள் இரண்டு (02), உழவு இயந்திரங்கள் இரண்டு (02) மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

21 Jan 2025