கல்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
இலங்கை கடற்படையினர், மற்றும் பொலிஸாருடன் இணைந்து 2025 ஜனவரி ஆம் திகதி 26 கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில், விற்பனைக்கு தயாராக இருந்த ஐஸ் இலங்கை, மூன்று (03) கிராம் எண்பது (80) மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர், கல்பிட்டி பொலிஸாருடன் இணைந்து 2025 ஜனவரி 26 ஆம் திகதி கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கு விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த மூன்று கிராம் (03) எண்பது (80) மில்லிகிராம் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்பிட்டி பள்ளிவாசல்துறை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர் (01) மற்றும் ஐஸ் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.