யாழ்ப்பாணத்தில் 132 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் 2025 ஜனவரி 26 மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பத்திரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட நூற்று முப்பத்தி இரண்டு (132) சங்குகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒன்றும் கைது செய்யப்பட்டது.
அதன்படி, 2025 ஜனவரி 26, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மோட்டார் சைக்கிளை பரிசோதனை செய்த போது, அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பத்திரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட நூற்று முப்பத்தி இரண்டு (132) சங்குகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒன்றுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர், 132 சங்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைநகர் மீனவ பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டன.