இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் 2025 பெப்ரவரி 04 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற புறாக்கள் (PIGIONS) , ஆபிரிக்க காதல் பறவைகள் (AFRICAN LOVE BIRDS), பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) மற்றும் மருந்து தொகைகளுடன் பயணித்த லொறி ஒன்றுடன், மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.