நடவடிக்கை செய்தி

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கிழக்குக் கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரைக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்புவதற்கு கடற்படையின் உதவி

இலங்கைக்கு கிழக்கே திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை உடனடியாக வெளிநாட்டு கப்பலின் பங்களிப்புடன் தரையிறக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் 2025 பெப்ரவரி 06 அன்று அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

06 Feb 2025

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆபத்தான மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையின் உதவி

இலங்கைக்கு தெற்கு ஆழ்கடலில், காலியில் இருந்து 43 கடல் மைல் (சுமார் 79 கி.மீ) தொலைவில் சுகவீனமடைந்த, மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர் ஒருவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று இன்று (2025 பெப்ரவரி 06) சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.

06 Feb 2025