நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கிண்ணியா, சின்னவேலி, சள்ளிமுனை, நந்திக்கடல், வங்காலை ஆகிய கரையோர மற்றும் கடல் பிரதேசங்களில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி மற்றும் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) பேர், இரண்டு (02) மீன்பிடி கப்பல்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் அறுபத்தைந்து (65), நான்கு (04) டெட்டனேட்டர்கள், இரண்டு (02) ஜெலக்னைட் குச்சிகள் மற்றும் மூன்று (03) அங்குலங்கள் நீளமான சேவா நூல்கள் நான்கு (04) என்பன கைப்பற்றப்பட்டன.

28 Feb 2025