சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு வர முயன்ற ஏலக்காய் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் 03 சந்தேகநபர்கள் மன்னாரில் கடற்படையினரால் கைது
மன்னார் தாவுல்பாடு கடற்கரையில் 2025 மார்ச் 23ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 402 கிலோவிற்கும் அதிகமான ஏலக்காய், 3781 ஷாம்பு பாக்கெட்டுக்கள் மற்றும் 51 அழகுசாதனப் பாக்கெட்டுக்கள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதன்படி 2025 மார்ச் 23ஆம் திகதி காலை வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கரையோரத்திற்கு வந்த டிங்கி படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு டிங்கி படகில் இருந்த 14 உறைகளில் பொதிச்செய்யப்பட்டிருந்த கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 402 கிலோ 200 கிராம் ஏலக்காய், 3781 ஷாம்பு பாக்கெட்டுக்கள் மற்றும் 51 அழகுசாதனப் பாக்கெட்டுக்கள், அந்த டிங்கி படகொன்றுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 32 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும், ஏலக்காய், ஷாம்பு, அழகுசாதனப் பாக்கெட்டுக்கள் மற்றும் டிங்கி என்பன மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டன.