இலங்கைக்கு தெற்கே தேவந்திரமுனையில் இருந்து 326 கடல் மைல் (சுமார் 603 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் இலங்கையில் பல நாள் மீன்பிடி படகொன்றில் விபத்துக்குள்ளானதால் சுகவீனமுற்றிருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வெளிநாட்டுக் கப்பலின் உதவியுடன் 2025 மார்ச் 25 கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.