சுமார் 08 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் சந்தேகரொருவர் பரந்தன் பிதேசத்தில் கைது
இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருபது (20) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொரி (01) மற்றும் ஒரு சந்தேக நபர் 2025 மார்ச் 26 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.
அதன்படி, கிளிநொச்சி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலகேணி கடற்படை நிறுவனத்தால் பரந்தன் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதி வழியாகச் சென்ற சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்று சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், ஒரு (01) சந்தேக நபரும் லொரியில் கொண்டு செல்லப்பட்ட சுமார் இருபது (20) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவுடன் (01) லொரியும் கைது செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 08 மில்லியன் ரூபாவை விட அதிகமானது என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறையைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் லொரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.