நடவடிக்கை செய்தி
சுமார் 08 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் சந்தேகரொருவர் பரந்தன் பிதேசத்தில் கைது
இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருபது (20) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொரி (01) மற்றும் ஒரு சந்தேக நபர் 2025 மார்ச் 26 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.
27 Mar 2025
இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அப்பால், மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் பதினொரு (11) பேர் இன்று 2025 மார்ச் 27ஆம் திகதி அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
27 Mar 2025


