நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது
இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து பாலமீன்மாது, வங்காலை, மண்டைதீவு, இறக்கக்கண்டி, உள்ளங்காளி கலப்பு, வாழைச்சேனை, ஊறணிக் குளம், ஒலுத்துடை, கடைக்காடு, சுண்டிக்குளம், மட்டக்களப்பு நாவக்காடு கலப்பு, வவ்னதீவு கலப்பு மற்றும் வலைப்பாடு கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் 07 ஏப்ரல் வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், இரவு நேரங்களில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Apr 2025
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 2554 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை, நீர்கொழும்பு கலால் துறை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து, 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியிலும் மாவனெல்ல பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு மற்றும் சேமித்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து நான்கு (2554) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள், இரண்டு (02) லொறிகள் மற்றும் ஒரு (01) வேன் கைப்பற்றப்பட்டது.
11 Apr 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1142 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபரொருவர் நுரைச்சோலையில் கடற்படையினரால் கைது
கல்பிட்டி, நுரைச்சோலை தலுவ பகுதியில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து நூற்று நாற்பத்திரண்டு (1142) கிலோகிராம் மற்றும் எழுநூறு (700) கிராம் உலர்ந்த மஞ்சள் பொதியை ஏற்றிச் சென்ற சந்தேக நபரொருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
11 Apr 2025


