நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, மீன்வள ஆய்வாளருடன் இணைந்து, கட்டைக்காடு, கொக்குத்துடுவாய், திரியாய, நயாறு, மான்கர்னி, வாலைத்தோட்டம், குடுயிருப்பு, புல்லையாரடி, வவுணதீவு மற்றும் கந்தக்குடா ஆகிய கடல் பகுதிகளில் 2025 மே 20 முதல் 25 வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த (26) நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
29 May 2025
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் பீடி இலைகள், கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களுடன் 6 நபர்கள் கைது
இலங்கை கடற்படையினர், 2025 மே மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 252 கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 12.75 கிராம் கேரள கஞ்சா மற்றும் சுமார் 3 கிராம் 155 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து (05) சந்தேக நபர்களைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
29 May 2025


