நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரபட்ட 1300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளும் 29000 ஐ விடவும் அதிகமான பீடி தொகையினை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர் 2025 ஜூன் 22 ஆம் திகதி மன்னார், நடுக்குடா மற்றும் ஓலைத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து (1365) கிலோகிராம் பீடி இலைகளும், சுமார் இருபத்தொன்பதாயிரத்து நூறு (29100) பீடிகளும் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

24 Jun 2025