நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணத்தின் மாமுனை பகுதியில் ரூ.16 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள கேரள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் மாமுனை பகுதியில் இன்று (2025 ஜூலை 04) அதிகாலை இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள எழுபத்தொரு (71) கிலோகிராம் நானூறு (400) கிராம் கேரள கஞ்சாவானது பறிமுதல் செய்யப்பட்டது.

04 Jul 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 91 கிலோகிராம் உலர் இஞ்சி கற்பிட்டி கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி, பட்டலங்குண்டுவ பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்படவிருந்து, கடற்படையின் நடவடிக்கைகளினால் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்ட தொண்ணூற்றொன்று (91) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி (ஈரமான எடை) மற்றும் இருநூற்று முப்பத்தெட்டு (238) ஜோடி காலணிகள் கடற்படையினரால் 2025 ஜூலை 03 அன்று கைப்பற்றப்பட்டன.

04 Jul 2025