நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் எட்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 20 முதல் 22 வரை கற்பிட்டி வெல்லமுண்டலம், இப்பந்தீவு கடல் பகுதி, சிலாவத்துறை சவரிபுரம் அரிப்பு மேற்கு கடற்கரை பகுதி மற்றும் உச்சிமுனை வெல்ல தீவு ஆகிய இடங்களில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து முந்நூற்று தொண்ணூற்றொன்பது (2399) கிலோகிராம் பீடி இலைகள், முப்பத்தைந்து (35) கிலோகிராம் ஏலக்காய் மற்றும் ஒரு தொகை விவசாய இரசாயனங்களை ஏற்றிச் சென்ற நான்கு (04) டிங்கி படகுகளையும், எட்டு (08) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

24 Jul 2025