நடவடிக்கை செய்தி

மேற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 6 சந்தேக நபர்களையும், 335 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். போதைப்பொருட்கலை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் இன்று (2025 நவம்பர் 02) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.

02 Nov 2025