கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் சுமார் 2000 கடல் அட்டைகளுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் 2026 மார்ச் 12 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சுமார் இரண்டாயிரம் (2000) கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான வேலுசுமணவின் பள்ளிக்குடா கடற்படை வரிசைப்படுத்தல் பிரிவு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு (01) கெப் வண்டி சோதனை செய்யப்பட்டது. அங்கு, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட சுமார் இரண்டாயிரம் (2000) கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 54 வயதுக்குட்பட்ட கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள், கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.





