நடவடிக்கை செய்தி

வடக்கு கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதால் மூழ்கிய இந்திய மீன்பிடி படகில் இருந்து 2024 ஜூலை 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு (02) மீனவர்கள் மற்றும் சிகிச்சைக்காக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த ஒரு (01) மீனவரின் உடல் இலங்கை கடலோரக் காவல்படையினரால் இந்திய கடற்படைக் கப்பலான 'INS BITRA' க்கு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.

03 Aug 2024

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 749 கிலோகிராம் உலர் மஞ்சள் ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் (2024 ஜூலை 31) இன்று அதிகாலையில் கல்பிட்டி, உச்சமுனே கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட எழுநூற்று நாற்பத்தொன்பது (749) கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31 Jul 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1780 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஜூலை மாதம் 24 ஆம் திகதி மாலை நீர்கொழும்பு தடுகம தடாகத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து எழுநூற்று எண்பது (1780) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஆறு (06) டிங்கி படகுகளும் கைது செய்தனர்.

25 Jul 2024

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

இலங்கைக்கு தெற்கு பகுதியில் காலியில் இருந்து சுமார் 200 கடல் மைல் (சுமார் 370 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் சுகவீனமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் இருந்த மீனவரொருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு மூலம் இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவின் கடற்படையினரால் மீட்கப்பட்டார். இன்று (2024 ஜூலை 24,) மாலையில், கடற்படையினர் அவரை கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

24 Jul 2024

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படையினரின் உதவி

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் சுகவீனமடைந்த, இலங்கையில் பல நாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வணிகக் கப்பலொன்று மூலம் மீட்கப்பட்டார். 2024 ஜூலை மாதம் 24 ஆம் திகதி கரைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அவர் மருத்துவ கவனிப்புக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

24 Jul 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படை திணைக்களம், இன்று (2024 ஜூலை 23) அதிகாலை, யாழ் நெடுந்தீவிற்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் ஒன்பது (09) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Jul 2024

சட்டவிரோதமான முறையில் 778 கிலோகிராம் உலர் மஞ்சள் கையிருப்பு புத்தளத்தில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, 2024 ஜூலை 17, அன்று மாலை, புத்தளம், வெள்ளமுண்டலம் முதல் கொலங்கநத்த வரையிலான கரையோரப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று எழுபத்தெட்டு கிலோகிராம் (778) உலர் மஞ்சள் ஒரு சரக்கு (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

18 Jul 2024

போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து 2024 ஜூலை 17 ஆம் திகதி திருகோணமலை அபயபுர சந்தி பகுதியில் மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முந்நூற்று ஐம்பது (350) Pregabalin போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 Jul 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 226 கிலோ பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2024 ஜூலை 17,) கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இருநூற்று இருபத்தி ஆறு (226) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

17 Jul 2024

சட்டவிரோதமான முறையில் 477 கிலோகிராம் உலர் மஞ்சள் கையிருப்பு கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

கடற்படையினர் இன்று(2024 ஜூலை 11,) கல்பிட்டி பராமுனே தீவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதென சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று எழுபத்தி ஏழு (477) கிலோகிராம் உலர் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

12 Jul 2024