நடவடிக்கை செய்தி
திருகோணமலையில் மாவில் ஆறு குளக்கரை இடிந்து விழுந்ததில் சிக்கித் தவித்த 309 பேரை கடற்படை மீட்டது
திருகோணமலையில் உள்ள மாவில் ஆறு குளத்தின் ஒரு பகுதி நேற்று (2025 நவம்பர் 30,) பெய்த கனமழை காரணமாக நிரம்பி வழியும் நிலையை எட்டியதால் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடற்படை நவம்பர் 30 ஆம் திகதி முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றது.
01 Dec 2025
தேசிய அனர்த்த சூழ்நிலைக்கு ஏற்ப கடற்படை மேற்கொண்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் 10,099 பேருக்கு நிவாரணம் வழங்கினர்
தீவில் ஏற்பட்ட சீரற்ற வானிலையின் காரணமாக, ஏற்பட்ட தேசிய அனர்த்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், கடற்படை 2025 நவம்பர் 22 முதல் முழு தீவையும் உள்ளடக்கிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றுவரை (2025 நவம்பர் 30,) தீவின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் 10,099 பேருக்கு அனர்த்த நிவாரணம் வழங்கியுள்ளதுடன் இதைத் தொடர்ந்து மேலும் நடவடிக்கைகள் தொடர்ந்துக் கொண்டு வருகின்றன.
30 Nov 2025
மத்திய, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தொடர்ச்சியான அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் 882 பேருக்கு கடற்படை நிவாரணம் வழங்கியது
மத்திய, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை இன்று (2025 நவம்பர் 29,) தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி, மேற்கு கடற்படை கட்டளையானது கண்டி, கன்னோருவ, கம்பளை, கட்டுகஸ்தோட்டை, சிலாபம், இரத்தினபுரி, கொலன்னாவ, மீகொட, அவிசாவளை, தல்துவ, வெலிவிட்ட, திவுலப்பிட்டிய, படல்லகம, மஹவெவ, கிரிவுல்ல, கேகாலை, ருவன்வெல்ல, அயகம, கலவானை, மாரபன மற்றும் மீரிகம ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 882 மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளது.
29 Nov 2025
அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொடர்ச்சியான பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் மூலம் கடற்படை 380 பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளது
அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை இன்று (2025 நவம்பர் 29,) தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையினால்: அனுராதபுர இபலோகம, பதவி பராக்கிரமபுர, சேனபுர, மதவாச்சிய, செட்டிகுளம், கல்னேவ, தபுத்தேகம மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த 380 பேருக்கு நிவாரணம் வழங்கியது.
29 Nov 2025
திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 1310 பேருக்கு கடற்படை நிவாரணம் வழங்கியது
இலங்கை கடற்படையினர், தீவு முழுவதையும் உள்ளடக்கிய அதிக ஆபத்துள்ள அனர்த்த பகுதிகளுக்கு அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது. இன்று (2025 நவம்பர் 29,) கிழக்கு கடற்படை கட்டளையினால், திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களினுல்; கிண்ணியா மல்லபச்சேனை, கந்தளை, மூதூர் சாபி நகர், கலாஓயா, கோமரங்கடவல, ரால் பாலம், கல்லெல்ல மற்றும் அளுத்கம போகமுவ ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் போது, வெள்ளம் காரணமாக ஆபத்தில் இருந்த 69 பேர் மீட்கப்பட்டு 1241 பேர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
29 Nov 2025
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது
சீரற்ற காலநிலையினால் தீவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கலாஓயா, வாரியபொல, கொபேகனை, நச்சிக்குடா மல்லாவில், பொலன்னறுவை கல்லெல்ல, குருநாகல் மஹவ, சிலாபம் அரியகம, திவுலுபிட்டிய, கொடதெனியாவ, கண்டி, ஹல்லொலுவ, தலாது ஓயா மஹமெதகம, கொலன்னாவ மற்றும் கேகாலை குருகல்ல ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை (2025 நவம்பர் 29,) மேற்கொண்டு வருகின்றனர்.
29 Nov 2025
திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை நிவாரணங்களை வழங்குகிறது
தீவை பாதித்துள்ள பாதகமான வானிலை காரணமாக பெய்து வரும் கனமழையினால், திருகோணமலை, முத்தூர் கிண்ணியா மற்றும் அம்பாறை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை இன்று (2025 நவம்பர் 28) காலை முதல் கடற்படையினர் மேற்கொண் வருகின்றனர்.
28 Nov 2025
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படையினரின் உதவி
யாழ்ப்பாணப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக புங்குடுதீவில் சிக்கிக்கொண்ட ஒரு பெண், அடைபட்ட அணுகல் சாலைகள் காரணமாக சிகிச்சை பெற முடியாமல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், இன்று (2025 நவம்பர் 28,) காலை கடற்படையினரால் புங்குடுதீவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
28 Nov 2025
சீரற்ற வானிலை காரணமாக மஹவ மற்றும் எலுவன்குளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற கடற்படை உதவி
தீவில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, குருநாகலில் உள்ள மஹவ கல்டன் குளத்தின் நீர்மட்டம் பெருக்கெடுத்தல் மற்றும் புத்தளம் எலுவன்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025 நவம்பர் 28,) காலை மேற்கொண்டன.
28 Nov 2025
சீரற்ற வானிலை காரணமாக ஹங்குரான்கெத்த பகுதியில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற கடற்படை உதவி
தீவை பாதித்த பாதகமான வானிலையை எதிர்கொண்டு, மண் மேடு சரிந்து விழுந்ததால் கொஸ்கஹலந்த, மாஓயா, உனுவின்ன, ஹங்குரான்கெத்த பகுதியில் சிக்கிய ஒரு குழுவினர் கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்களால் நேற்று (2025 நவம்பர் 27,) பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
28 Nov 2025


