நடவடிக்கை செய்தி
4 மில்லியன் ரூபாக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா மன்னாரில் கைது
இலங்கை கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மன்னார், வங்காலை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது பத்து (10) கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நான்கு (04) சந்தேகநபர்கள் மற்றும் ஒரு வேன் வண்டி (01) கைது செய்யப்பட்டது.
23 Apr 2024
ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் ஆறு (06) கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
09 Apr 2024
பல வர்த்தக வெடிபொருட்கள் புல்முடை கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது

இலங்கை கடற்படையினர் 2024 ஏப்ரல் 05 ஆம் திகதி புல்முடை, ஜின்னாபுரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் ஆறு (06) குச்சிகள், 01 பாதுகாப்பு உருகி மற்றும் 20 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டன.
06 Apr 2024
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

திருகோணமலை, ரதுகல கடற்பகுதியில் 2024 ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேருடன் (07) ஒரு டிங்கி படகு (01) மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.
05 Apr 2024
சட்டவிரோதமாக விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட 5033 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கல்முனையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2024 ஏப்ரல் 04 ஆம் திகதி கல்முனை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது முறையான அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட ஐயாயிரத்து முப்பத்து மூன்று (5033) வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
05 Apr 2024
சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற 05 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (04 ஏப்ரல் 2024) அதிகாலை மன்னார் ஆச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற ஐந்து பேருடன் (05) சுமார் ஐந்நூற்று எண்பத்தி ஒன்பது (589) கடல் அட்டைகள், மூன்று (03) மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
04 Apr 2024
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 469 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2024 ஏப்ரல் 02) அதிகாலை நோரோச்சோலை மாம்புரி கடற்கரை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக கொண்டு வந்து போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 469 கிலோ 500 கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு லொறி வண்டி (01) கைப்பற்றியுள்ளனர்.
02 Apr 2024
10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரவு வெலிஓய, நிகவெவ பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இருபத்தி ஏழு (27) கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
27 Mar 2024
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினரால் 2024 மார்ச் மாதம் 25 ஆம் திகதி நீர்கொழும்பு தடாகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டது.
26 Mar 2024
02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸ் சிறப்புப் படையணிவுடன் இணைந்து 2024 மார்ச் 22 ஆம் திகதி மாலை கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
23 Mar 2024