நடவடிக்கை செய்தி
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி இரவு திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) நபர்களுடன் இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.
05 Sep 2023
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை மதுரங்குடா கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் டிங்கி படகொன்று (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றினர்.
04 Sep 2023
660 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் மற்றும் நொரோச்சோலை பொலிஸார் இணைந்து 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி புத்தளம், கரம்பே சந்தி வீதித் தடுப்பில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் அறுநூற்று அறுபது (660) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
04 Sep 2023
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், கடைக்காடு கடற்பகுதியில் 2023 செப்டெம்பர் 01 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு (07) பேருடன் இரண்டு (02) படகுகள் கைது செய்யப்பட்டது.
02 Sep 2023
போதைப்பொருள் கடத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் 05 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

2023 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பதினைந்து (15) மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.
31 Aug 2023
3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2023 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மாலை கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகள் சட்டவிரோத விற்பனைக்காக ஏற்றிச் சென்ற வான் ஒன்றுடன் (01) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 Aug 2023
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீர்கொழும்பு, பிடிபன தடாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தடாகம் பகுதியினூடாக சட்டவிரோதமான முரையில் கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று நாற்பது (440) கிலோகிராம் பீடி இலைகளுடன் டிங்கி (01) படகொன்று கைப்பற்றப்பட்டது.
30 Aug 2023
கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட இந்திய நாட்டவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

இலங்கைக்கு கிழக்குக் கடற்பகுதியில் MV Empress எனும் உல்லாசக் கப்பலில் பயணித்த போது திடீரென சுகவீனமடைந்த இந்திய நாட்டவர் ஒருவரை கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 29) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
29 Aug 2023
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரால் கைது

லங்காபடுன, குச்சவேளி மற்றும் திருகோணமலை கடற்பகுதிகளில் 2023 ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணம், சளை கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேருடன் ஆறு (06) படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
28 Aug 2023
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் புத்தளத்தில் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

புத்தளம், தில்லையடி பகுதியில் இன்று (26 ஆகஸ்ட் 2023) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதியினூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்றிரண்டு (792) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
26 Aug 2023