நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பல நாள் மீன்பிடிக் படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் நோக்கில், இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பல நாள் மீன்பிடிப் படகுகளுடன் 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

25 Jul 2023

சுமார் 28 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா வடகடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை 23 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், குடைரிப்பு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 86 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது.

24 Jul 2023

வடக்கு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை 21 மற்றும் 22 திகதிகளில் யாழ்ப்பாணம் கதைக்காடு மற்றும் வெத்தலக்கேணி கடற்பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினாறு (16) பேருடன் பதினொரு (11) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களைக் கைப்பற்றினர்.

24 Jul 2023

54 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், வெத்தலக்கேணி வத்திராயன் கடற்பகுதியில் இன்று (2023 ஜூலை 23) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 165 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் சந்தேக நபர் (01) ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 Jul 2023

வவுனியா பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி

வவுனியா, இரட்டைப்பெரியகுளம் பகுதியில் உள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் 2023 ஜூலை 21 ஆம் திகதி திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க கடற்படையின் தீயணைப்பு குழுவினர் உதவியளித்தனர்.

22 Jul 2023

11 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மாமுனை பகுதியில் இன்று (2023 ஜூலை 19) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது முப்பத்தைந்து (35) கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

19 Jul 2023

557 கிலோ கிராமுக்கு அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 02 டிங்கி படகுகள் நீர்கொழும்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை மாதம் 18 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த களப்பு பகுதியூடாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐநூற்று ஐம்பத்தேழு (557) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றினர்.

19 Jul 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கடைக்காடு, நகர்கோவில் மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 2023 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவில் சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத ஒளி நீரோட்டங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 16 மீனவர்கள், நான்கு (04) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

18 Jul 2023

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பெரிய அரிச்சால் தீவுகளுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் 2023 ஜூலை மாதம் 14 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதிவூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் ஐநூற்று முப்பது (530) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட (ஈரமான எடை) (01) டிங்கி படகொன்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

15 Jul 2023

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மற்றும் அரியாலை பகுதிகளில் 65 வர்த்தக வெடிபொருட்கள் குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மற்றும் அரியாலை பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது ஊர்காவற்துறை அல்லப்பிட்டி களப்பு பகுதியில் மற்றும் அரியாலை மணியந்தோட்டம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினெட்டு மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், 65 வணிக வெடிபொருட்கள் மற்றும் 155 செ.மீ நீளமுள்ள பாதுகாப்பு உருகிகள் கைப்பற்றப்பட்டது.

06 Jul 2023